வியட்நாம் நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்குவது என்பது
தற்போது முற்றிலுமாக வியட்நாம் அரசை சார்ந்தே உள்ளது, அந்நாட்டு கர்தினால்
ஜூலை20,2009. வியட்நாம் நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்குவது
என்பது தற்போது முற்றிலுமாக வியட்நாம் அரசை சார்ந்தே உள்ளது என்று அந்நாட்டு கர்தினால்
ஷான் பாப்பிஸ்ட் பாம் மின் மான் கூறினார்.
வியட்நாமுடன் அரசியல் உறவை உருவாக்கத்
திருப்பீடம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் தற்போதைய பதில் வியட்நாம் அரசு வசமே உள்ளது
எனவும் கர்தினால்
கூறினார்.
வியட்நாம் அரசு பிரதிநிதிகள் குழு வரும் நவம்பரில்
வத்திக்கானுக்கும் செல்லவுள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், டிசம்பரில் வியட்நாம் அரசுத்
தலைவர் நுகுயென் மின் திரியெட் இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்கையில் திருத்தந்தையையும்
சந்தித்தால் அது ஒரு நம்பிக்கை தரும் அடையாளமாக இருக்கும் எனக் கூறினார்.
2011ம்
ஆண்டில் திருத்தந்தை வியட்நாமில் திருப்பயணம் மேற்கொள்ளலாம் என வியட்நாம் ஆயர்கள் நம்பிக்கை
கொண்டுள்ளதையும் கர்தினால் மான் சுட்டிக் காட்டினார்.