2009-07-17 17:10:44

வத்திக்கான் செயலகத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் .170709 .


வத்திக்கான் செயலகத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்ய்ப்பட்டுள்ளார்கள்.

செயலகத்தின் நடுத்தர முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள திருத்தந்தை ஜூலை 16 ஆம் தேதி அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் மேதகு பீட்டர் பிரையன் வெல்ஸ் என்பவரை அசெஸ்சர் , மதிப்பீட்டாளர் என்ற பதவியில் அதாவது உதவிச் செயலர் என்ற பதவியில் அமர்த்தியுள்ளார் . மேதகு வெல்ஸ் முந்நாள் இப்பதவியிலிருந்த மேதகு கபிரியேலே கச்சியாவுக்குப் பதிலாக நியமனம் ஆகியுள்ளார் . கச்சியா லெபனான் நாட்டின் வத்திக்கான் தூதராகச் செல்கிறார் . ஜூலை 16 ல் மேதகு பேராயர் கார்லோ மரிய விகானோவை வத்திக்கான் நாட்டின் செக்ரட்டரி ஜெனரல் என்ற பதவியில் நியமித்திருக்கிறார் திருத்தந்தை . அப்பதவியிலிருந்த ஆயர் ரெனாட்டோ பொக்கார்டோ இத்தாலியின் ஸ்போலியோ நோர்சியாவின் பேராயராக நியமனமாகியிருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.