2009-07-17 17:12:22

கருச்சிதைவைக் கண்டித்து காமரூன் நாட்டின் கர்தினால் போர்க்கொடி.1707.


ஆப்பிரிக்காவில் கருச்சிதைவுக்கு சட்டப்படி அனுமதி வழங்கியதன் ஆறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களை எதிர்த்து 20,000 மக்களோடு ஊர்வலம் நடத்தினார் காமரூன் நாட்டின் தொவோலாவின் கர்தினால் கிறிஸ்டியன் வியாகன். ஆப்பிரிக்காவின் மபூட்டோ உடன்படிக்கை கருச்சிதைவு செய்ய சட்டப்படி அனுமதி வழங்கியிருந்தது . இதனை பல ஆப்பிரிக்க நாடுகள் அமல்படுத்தின . கற்பழிப்பு, நெருங்கிய உறவினர்களின் பாலியல் தொடர்பு ஆகியவை காரணமாகப் பிறக்கவிருக்கும் குழந்தைகளை, மற்றும் தொடர் மகப்பேறு காரணமாக தாயின் உடல் நலக்கேடு போன்ற காரணங்களுக்காக சட்டப்படி கருச்சிதைவு செய்ய ஆப்பிரிக்க நாடுகள அனுமதித்திருக்கின்றன .

பெண்கள் மாண்பைக் காப்பதாகக் கூறிக்கொண்டு கருச்சிதைவையும் கருத்தடுப்பையும் எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்கப்படக்கூடாது என ஊர்வலத்தின் முடிவில் பேசிய தோவாலாவின் துணைப் பேராயர் சாமுவேல் கிளேடா ஆணித்தரமாகக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.