2009-07-16 14:09:41

வரலாற்றில் ஜூலை 17


புனித அம்புரோசியாரின் சகோதரியான புனித மார்செலினா, புனித அலெக்ஸ், புனித திருத்தந்தை நான்காம் சிங்கராயர் ஆகியோர் நினைவுகூரப்படுகின்றனர். உரோமையில் பணக்கார செனட்டர் யூப்பெமியானின் ஒரே மகனான அலெக்ஸ் பெற்றோரின் பிறரன்புச் செயல்களால் கவரப்பட்டு தானும் உலகைத் துறந்து வாழத் தீர்மானித்தார். அவரது திருமண நாளின் இரவில் மணப்பெண்ணின் அனுமதியோடு இரகசியமாக உரோமையை விட்டு வெளியேறினார். அண்மை கிழக்குப் பகுதியில் எடிசா என்ற நகரை அடைந்து அந்நகர் மாதா ஆலயக் கதவருகில் பிச்சையெடுத்துப் பல ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கடவுளின் மனிதர் என ஒரு நாள் அன்னை மரியா மக்களுக்கு அறிவித்தாள். அன்றிலிருந்து மக்கள் இவரது தாய்மையான வாழ்வை அறிய வந்தனர்.

ஜூலை 17, 180 – வட ஆப்ரிக்காவின் சிலியும் குடிமக்களில் 12 பேர் கிறிஸ்தவர்கள் என்பதற்காகக் கொல்லப்பட்டனர். இது, அப்பகுதியில் கிறிஸ்தவத்திற்கு எதிராய் நடந்த முதல் வன்நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.

1203 - நான்காம் சிலுவைப்போர்ப் படைகள் கான்ஸ்டாண்டிநோபிள் நகரைத் தாக்கி அதைக் கைப்பற்றினர். பைசாண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியுஸ் ஆஞ்செலுஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்

1775 - முதல் இராணுவ மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டது.

1794 ப்ரெஞ்சி புரட்சியின் வன்கொடுமை முடிவடைவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னதாக கோம்பிகெனெவின் 16 கார்மேல் சபைத் துறவிகள் கொல்லப்பட்டனர்.

1975 – அமெரிக்க ஐக்கிய நாட்டின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்

1976 - கிழக்குத் தைமோர் இந்தோனேசியாவின் 27வது மாநிலமாக இணைக்கப்பட்டது

1998 - பாப்புவா நியூ கினியில் கடலுக்குக் கீழே ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன மற்றும் 3,183 பேர் வரையில் இறந்தனர்.

ஜூலை 17 சர்வதேச நீதி தினம்








All the contents on this site are copyrighted ©.