2009-07-16 19:44:28

வத்திக்கான் ரஷ்ய உறவில் முன்னேற்றம் – 160709 .


வத்திக்கான் திருப்பீடமும் ரஷ்யாவும் அரசுத்தூதரக உறவைத் தொடர வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஆயர்கள் சங்கச் செயலர் தந்தை ஈகோர் கோவாலெவ்ஸ்கி செய்தி வெளியிட்டுள்ளார் . ரஷ்யாவும் வத்திக்கான் திருப்பீடமும் உலகளாவிய பல திட்டங்களில் ஒரே நோக்குடன் இருப்பதால் இரு நாட்டின் அரசியல் உறவுகளும் வலுப்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என மேலும் தந்தை ஈகோர் கோவாலெவ்ஸ்கி தெரிவித்துள்ளார் . இது பற்றிய பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் விரைவில் தொடரும் என ரஷ்யாவின் குடியரசுத் தலைவர் டிமிட்ரி மெட்வெதேவ் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார் .மேலும் சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் பிதாப்பிதாவாக மெட்ராபாலிட்டன் கிரில் பதவி ஏற்ற பின்னர் வத்திக்கானுக்கும் ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைக்குமிடையே உறவுகள் வளர்ந்து வருவதாகவும் தந்தை கோவாலெவ்ஸ்கி தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.