2009-07-14 14:56:43

பிலிப்பைன்சில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி


ஜூலை14,2009 பிலிப்பைன்சில் மின்டனோவா பகுதியில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள் அப்பகுதியின் முன்னேற்றம் மற்றும் அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க அழைப்புவிடுத்துள்ளனர்.

பிலிப்பைன்சில் மக்கள் பணியாளர்கள் கடத்தப்படுவது மேலும் தொடர்ந்தால் அதனால் பாதிக்கப்படுவது சமூகமே என எச்சரித்த பேராயர் ரோமுலோ வாலெஸ், வன்முறைகள் தொடர்ந்தால் வளர்ச்சி கைவிட்டுப் போகும் என்றார்.

பிலிப்பைன்சின் 95 ஆயர்கள் அண்மையில் மனிலாவில் கலந்து கொண்ட தலத்திருச்சபையின் 99வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வன்முறைகள், கொலைகள் மற்றும் உரிமை மீறல்கள் அன்றாட சாதாரண நிகழ்வு போல் நோக்கப்படக் கூடாது என்ற விண்ணப்பத்தையும் ஆயர்கள் விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் பிலிப்பைன்சில் கடத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று சமூகப் பணியாளர்களுள் இறுதியானவராக யூஜினியோ வாக்னி இஞ்ஞாயிறன்று விடுவிக்கப்பட்டதையொட்டி தங்களின் செய்தியை அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.