2009-07-13 16:05:26

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மனித மாண்பையும் அமைதியையும் சமய சுதந்திரத்தையும் ஊக்குவிப்பவர், கானடப் பிரதமர்


ஜூலை13,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஓர் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில் மனித மாண்பையும் அமைதியையும் சமய சுதந்திரத்தையும் ஊக்குவிப்பவர் கானடப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் திருத்தந்தையைப் பாராட்டிப் பேசினார்.

கடந்த சனிக்கிழமை வத்திக்கானில் திருத்தந்தையைத் தனது குடும்பத்தினருடன் சந்தித்த பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த கானடப் பிரதமர், திருத்தந்தை 16ம் பெனடிக்டை சந்திப்பதும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு நன்னெறி ரீதியாகப் பதில் அளிப்பது, மனித உரிமைகள் உட்பட பல முக்கியமான விவகாரங்கள் பற்றிய அவரது கண்ணோட்டத்தைக் கேட்பதும் கௌரவமான ஒன்று எனக் கூறினார்.

மனித மாண்பு, அமைதி, சமய சுதந்திரம் ஆகியவற்றின் ஆலோசகர் என்ற முறையில் திருத்தந்தையின் ஒழுக்கநெறி மற்றும் மனிதாபிமான தலைமைத்துவம், இன்னும், உலகெங்கிலுமுள்ள மற்றும் கானடா கத்தோலிக்கருக்கு அவர் வழங்கும் அவரது ஆன்மீகத் தலைமைத்துவத்தின் மீதான தனது அளப்பரிய பாராட்டையும் ஹார்ப்பர் வெளிப்படுத்தினார்.

இத்தாலியில் நடைபெற்ற ஜி-8 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்குப் பின்னர் கானடப் பிரதமர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்தனர்.








All the contents on this site are copyrighted ©.