2009-07-11 15:41:23

தென் கொரிய ஆயர் கருணைக் கொலைக்கு வன்மையான கண்டனம்


ஜூலை11,2009 மாண்புடன்கூடிய இறப்பு குறித்த கருத்துருவாக்கம், கொரிய மக்களை தன்னுணர்வின்றி ஏற்க வைக்கின்றது, நேரிடையாக இறப்புக்குக் காரணமாகும் எந்த ஒரு செயலும் ஒருபொழுதும் நியாயப்படுத்தப்பட முடியாதது மற்றும் சட்ட ரீதியானதுமல்ல என்று கொரிய ஆயர் ஒருவர் குறை கூறினார்.

தென் கொரியாவில் இரண்டாவது மருத்துவமனை கடந்த மாதத்தில் கருணைக் கொலையை நடத்தியதை முன்னிட்டு அதனை இவ்வாறு கண்டித்துப் பேசினார் அந்நாட்டு ஆயர் பேரவையின் உயிரியல் நன்னெறிகள் ஆணையத் தலைவர் ஆயர் கபிரியேல் சாங் போங்-ஹன்.

மாண்புடன் இறத்தலுக்கான உரிமை குறித்த போராட்டம் கருணைக் கொலையை எதிர்ப்பதற்கான போராட்டம், கத்தோலிக்கர் இந்தக் கருணைக் கொலையை வன்மையாய்க் கண்டிக்கின்றனர் என்றார் ஆயர் சாங் போங்-ஹன்.

தென் கொரியாவில் கருணைக் கொலையின் பேரில் 77 வயதுப் பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை முறை வாழ்வுப் பாதுகாப்புச் சிகிச்சைகள் கடந்த மாதம் 23ம் தேதி நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் அவர் இன்னும் உயிரோடிக்கின்றார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.










All the contents on this site are copyrighted ©.