2009-07-11 15:40:25

இலங்கை அகதிகள் முகாம்களில் குருக்கள் ஆன்மீகப் பணிகள்


ஜூலை11,2009 இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள நூறாயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு அம்முகாம்களிலுள்ள குருக்கள் ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

அகதிகளுக்கு ஆன்மீகப் பணிகள் செய்யும் இரண்டு குருக்கள், தமிழ் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போர்ப் பகுதிகளிலிருந்து தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நோய் அல்லது வயது காரணமாக இராணுவம் சில குருக்களை முகாம்களைவிட்டு வெளியேற்றி இருந்தாலும் குறைந்தது ஆறு குருக்கள் அங்கு இருப்பதாகத் திருச்சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்சமயம் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகள் முகாம்களில் உள்ளனர்.

மேலும், இந்தியா, 2009 மற்றும் 2010ம் ஆண்டு வரவு செலவு பட்டியலில் இலங்கை அகதிகளுக்கென 500 கோடி டாலர் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இது குறித்துப் பேசிய மனித உரிமை வழக்கறிஞர் இயேசு சபைக்குரு சந்தானம், இலங்கை அகதிகள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பணம் மட்டும் போதாது என்றார்.

இலங்கை அரசு, இப்பணத்தைப் பயன்படுத்தும் விதம் குறித்த உறுதியைப் பெற்ற பின்னரே இந்தியா இதனை வழங்கும் என்ற தனது நம்பிக்கையையும் குரு சந்தானம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.