2009-07-10 15:17:06

சிறிய ஆயுதங்கள் விற்பனை 290 கோடி டாலரை எட்டியுள்ளது


ஜூலை10,2009 உலக அளவில் சிறிய ஆயுதங்கள், இலேசான ஆயுத வியாபாரத்தின் மதிப்பு 2000 மற்றும் 2006க்கு இடைப்பட்ட காலத்தில் 28 விழுக்காடு அதிகரித்து அது 290 கோடி டாலரை எட்டியுள்ளது என்று சிறிய ஆயுதக் கணக்கெடுப்பு பற்றிய ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஜெனீவா சர்வதேச நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறிய ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதை முன்னிட்டு உலக அளவில் இவ்வியாபாரம் 48 விழுக்காடு அதிகரித்துள்ளது.

53 நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், சவுதி அரேபியா, சைப்ரஸ் போன்ற நாடுகளில் சிறிய ஆயுதங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனத் தெரிகிறது.

கைத்துப்பாக்கிகள், சுழல் துப்பாக்கி, வெடிமருந்து குண்டுகள் போன்ற சிறிய ஆயுதங்கள் பற்றிய அறிக்கை இவ்வாறு கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.