2009-07-10 15:14:57

கந்தமால் மாவட்டத்தில் சேதமடைந்த ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கு ஒரிசா அரசு நாற்பது இலட்சம் ரூபாய் வழங்கத் தீர்மானம்


ஜூலை10,2009 கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த ஆலயங்களை மீண்டும் கட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளன.

கந்தமால் மாவட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்குச் சொந்தமான 196, ஆலயங்கள் மற்றும்பிற கட்டிடங்களைச் சீரமைப்பதற்கென 42 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதற்கு ஒரிசா மாநில அரசு தீர்மானித்துள்ளது.

ஒரிசா வன்முறையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கவிருப்பதாக மத்திய அரசும் அறிவித்துள்ளது.

கிறிஸ்தவக் குழுக்கள் ஒரிசா அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்நிதியுதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.