2009-07-09 15:40:49

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் கேள்விகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்


ஜூலை09,2009 இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் கேள்விகளால் தொடர்ந்து நச்சரிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருகின்றனர் என்று இந்திய திருச்சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக, இம்மாதம் ஆறாம் தேதி, புனித ஸ்டீபன் உயர்நிலைப் பள்ளியில் இடம் பெற்ற வன்முறைச் செயலைச் சுட்டிக் காட்டிய அப்பள்ளி ஆசிரியர் அருள்சகோதரி அர்ச்சனா, வன்முறைக் கும்பல் ஒன்று சில நிருபர்களுடன் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தந்தை சி. இராயப்பனை அடித்துத் தாக்கியதாகத் தெரிவித்தார்.

கிழக்கு குஜராத்தின் டாஹோடில் 1932ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி வளாகத்திலிருந்த அன்னை மரியா கெபி மீது கற்களை எறிந்ததோடு கண்ணாடியை உடைத்து மாதா திருஉருவத்தையும் அவமரியாதை செய்தனர் என்றும் அச்சகோதரி கூறினார்.

இந்து தீவிரவாத குழு ஒன்று இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.