2009-07-08 14:16:09

மடுமாதா திருத்தல விழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்குமாறு மன்னார் ஆயர் அழைப்பு


ஜூலை08,2009. இலங்கை மடுமாதா திருத்தல விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு உதவியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுமாறு மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உட்பட அனைத்து மக்களும் மடுமாதா திருத்தல விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுமாறு ஆயர் இராயப்பு நிருபர்களிடம் கூறினார்.

மடுமாதா திருத்தலத்தில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மரியின் விண்ணேற்பு விழாக் கொண்டாடப்படுவதற்கு அனுமதிப்பதாக இலங்கை அரசு அண்மையில் அறிவித்தது. எனினும் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தாதவரை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்று ஆயர் அறிவித்தார்.

400 ஆண்டுகள் பழமை கொண்ட மடுமாதா திருத்தலத்திற்கு கத்தோலிக்கர் மட்டுமல்ல பிற மதத்தவரும் செல்கின்றனர்.

 








All the contents on this site are copyrighted ©.