2009-07-07 14:34:25

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மூன்றாவது திருமடல் “உண்மையில் பிறரன்பு”


ஜூலை07,2009. கிறிஸ்து சாட்சி பகர்ந்த உண்மையிலான பிறரன்பே, மனிதகுலமனைத்தின் உண்மையான வளர்ச்சிக்குப் பின்னான தூண்டு சக்தி என்ற வரியை மையமாக வைத்து “உண்மையில் பிறரன்பு” Caritas in Veritate என்ற தன் திருமடலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ளார்.

ஆறு அதிகாரங்களைக் கொண்ட இவ்வேட்டின் முதல் அதிகாரம், “மக்களின் முன்னேற்றம்”குறித்த திருத்தந்தை ஆறாம் பவுலின் போப்புலோரும் புரோகிரேஸ்ஸியோ என்ற திருமடல் குறித்து விவாதித்து கடவுளின்றி முன்னேற்றம் என்பது எதிர்மறை விளைவுகளையே கொணரும் என்பதையும் நீதி மற்றும் சுதந்திரத்தின் வழியில் அமையும் சமூகத்தினைக் கட்டி எழுப்ப நற்செய்தியின் இன்றியமையாத அவசியத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

நம் காலத்தின் மனிதகுலமேம்பாடு என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இரண்டாவது அதிகாரம், பொதுநல நோக்கமின்றி இலாபம் ஒன்றையே தன் முக்கிய குறிக்கோளாகக் கொள்ளும் போது அது வளங்களை அழிவுக்குள்ளாக்குவதுடன் ஏழ்மை பெருகுவதற்கும் காரணமாகின்றது என்பதை மையமாகக் கொண்டு விளக்குகிறது.

சர்வதேச அளவிலான பொருளாதார போட்டிகளில் தொழிலாளர்கலின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் இதில் பாப்பிறை சுட்டிக் காட்டியுள்ளார்.

சகோதரத்துவம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாகரீக சமுதாயம் பற்றி விவாதிக்கும் மூன்றாம் அதிகாரம், ஏழைகள் என்பவர்கள் ஒரு சுமையாக நோக்கப்படாமல் ழள ஆதாரமாகக் காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

மக்களின் வளர்ச்சி, கடமைகள், உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து இச்சுற்று மடலின் நான்காம் அதிகாரமும், மனிதகுலக் குடும்பத்தின் ஒத்துழைப்பு குறித்து ஐந்தாம் அதிகாரமும், மக்களின் வளர்ச்சியும் தொழில்நுட்பமும் என்பது குறித்து ஆறாவது அதிகாரமும் விவாதிக்கின்றன.



 








All the contents on this site are copyrighted ©.