2009-07-06 16:01:28

வரலாற்றில் ஜூலை 07


இந்நாளில் புனிதர்கள் பத்தானேயுஸ் மற்றும் திருத்தந்தை 11ம் பெனடிக்ட் விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. இத்தாலியரான பத்தானேயுஸ் உண்மைக்குச் சான்று பகரத் தன்னை அர்ப்பணித்தவர். மேலும், இத்தாலியரான புனித திருத்தந்தை 11ம் பெனடிக்ட், எட்டு மாதங்கள் பாப்பிறையாகப் பணியாற்றிய பின்னர் திடீரென 1304ம் ஆண்டு ஜீலை 7ம் தேதி பெரூஜியாவில் இறந்தார்.

1456 – புனித ஜோன் ஆஃப் ஆர்க் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அவள் குற்றமற்றவள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

1656 – சீக்கிய மத எட்டாவது குரு ஹார் கிரிஷன் பிறந்தார்

1896 - இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1969 - கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

1946 - அன்னை பிரான்சிஸ் சேவியர் கபிரினி புனிதையாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் முதல் அமெரிக்க புனிதையாக மாறினார்.

1978 - சாலமன் தீவுகள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றன.

2007 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சும்மோரும் போந்திபிக்கும் என்ற அப்போஸ்தலிக்க கடிதம் மூலம் பழைய இலத்தீன் திருப்பலி மீதான கட்டுப்பாடுகளை அகற்றினார்.

2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மகாலும் அவற்றில் ஒன்றாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது








All the contents on this site are copyrighted ©.