2009-07-03 15:53:10

பன்றிக்காய்ச்சல் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு உலகில் பரவி வருகிறது, உலக நலவாழ்வு நிறுவனம்


ஜூலை03,2009 பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் நோய்க் கிருமிகள் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு உலகில் பரவி வருவதாக உலக நலவாழ்வு நிறுவனம் கவலை தெரிவித்தது.

பன்றிக்காய்ச்சல் கிருமிகள் பரவுவதைத் தடை செய்யும் வழிகள் குறித்து ஆராய்வதற்கென மெக்சிகோ நாட்டு கான்குன்னில் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச கூட்டத்தில் இதனை அறிவித்தார் அந்நிறுவனத் தலைவர் டாக்டர் மார்கிரேட் சான்.

தற்சமயம் 100க்கு மேற்பட்ட நாடுகளில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் சான் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் மெக்சிகோ கூட்டத்தில் ஐம்பது நாடுகளின் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்







All the contents on this site are copyrighted ©.