2009-07-02 16:16:42

வியட்நாமில் சிறைவைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கக் குருவை உடனடியாக விடுவிக்க அமெரிக்க செனட் அவை அங்கத்தினர்கள் அழைப்பு


ஜூலை02,2009 2007ம் ஆண்டிலிருந்து வியட்நாமில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு கத்தோலிக்கக் குருவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென அமெரிக்க ஐக்கிய நாட்டு 37 செனட் அவை அங்கத்தினர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

வியட்நாம் அரசுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டார் என 2007ம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்ட குரு நுகுயென் வான்லி எட்டு ஆண்டுகளுக்கு எனத் தீர்ப்பிடப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அரை நாளிலேயே வழங்கப்பட்ட இக்குருவுக்கு எதிரானத் தீர்ப்பின் போது அவர் சார்பாக வழக்கறிஞரை அனுமதிக்கவோ ஆலோசனை பெறவோ வாய்ப்பு வழங்கப்படவில்லை என அமெரிக்க ஐக்கிய நாட்டு 37 செனட் அவை அங்கத்தினர்களும் தங்கள் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.

63 வயதான குரு நுகுயென் வான்லிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை உடனடியாக நீக்கப்பட்டு அவரின் பேச்சு சுதந்திரத்திற்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வியட்நாம் அரசுத்தலைவர் நுகுயென் மின் திரியெட்டுக்குச் செய்தி அனுப்பியுள்ள செனட் அங்கத்தினர்கள், அக்குருவின் உடல்நலம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.