2009-07-01 14:47:46

தாய்லாந்தில் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சியில் புத்தமதத்தினரோடு சேர்ந்து உழைத்து வருகிறது. கத்தோலிக்கத் திருச்சபை


ஜூலை01,2009 தாய்லாந்தில் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சியில் பூர்வீக இனத்தவர் மற்றும் புத்தமதத்தினரோடு சேர்ந்து உழைத்து வருகிறது. அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை.

ரஷ்கபுரி மறைமாவட்ட சமூகநல மேம்பாட்டு மையமும் பான் டோங் சலாவோ கிராமத்தின் ஒயாங் ஜூ புத்தமத ஆலயமும் இணைந்து காடுகள் திருநிலைப்பாடு என்ற நிகழ்வை நடத்தின.

அதன் வெளிப்பாடாக புதிதாக மரங்களும் நடப்பட்டன.

இந்நிகழ்வில் பேசிய ரஷ்கபுரி மறைமாவட்ட சமூகநல மேம்பாட்டு மைய இயக்குனர் அருட்திரு பிரசிட் ருஜிரட், கிறிஸ்தவர்கள் என்ற விதத்தில் நாம் கடவுளின் படைப்பை அன்பு செய்து மதிக்க வேண்டும் என்றார்.

மேலும், மரங்களை நடுவது வாழ்வை நடுவதற்குச் சமம் என்று புத்தமதக் குருக்கள் கூறினர்.

 








All the contents on this site are copyrighted ©.