2009-06-30 16:00:44

ஜிம்பாபுவே புதிய பேராயர் பணியின் முக்கிய சவால்கள்- ஏழ்மை, பொருளாதார வளர்ச்சியின்மை, வேலைவாய்ப்பின்மை ஹைய்சைய்வி மற்றும் எய்ட்ஸ் பிரச்சனை


சூன்30,2009. இன்றைய ஜிம்பாபுவேயின் ஏழை மக்களுக்கான ஆன்மீக மற்றும் பொருள் தேவைகளைக் கவனிப்பதே தன் முதல் நோக்கமாக இருக்கும் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் புலவாயோவிற்கான புதிய பேராயர்.

புலவாயோவிற்கான புதிய பேராயராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த இறைவார்த்தை சபை குரு அலெக்ஸ் கலியானில், ஜிம்பாபுவேயில் பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய அரசு ஒன்று ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நாடு முன்னோக்கிச் செல்வதாகவும் மக்களின் வாழ்வில் நல்மாற்றங்கள் இடம் பெறுவதற்கான நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் கூறினார்.

ஜிம்பாபுவே காரித்தாஸ் கத்தோலிக்க உதவி அமைப்பின் ஆலோசகராகவும் செயல்படும் இவர் பேராயர் பணியின் முக்கிய சவால்களாக மக்களின் ஏழ்மை, பொருளாதார வளர்ச்சியின்மை, வேலைவாய்ப்பின்மை ஹைய்சைய்வி மற்றும் எய்ட்ஸ் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.