2009-06-27 15:39:51

ஜப்பான் கத்தோலிக்கப் பிரதமர் வருகிற ஜூலையில் திருத்தந்தையை சந்திக்கத் திட்டம்


சூன்27,2009. ஜப்பான் கத்தோலிக்கப் பிரதமர் தாரோ ஆசோ வருகிற ஜூலை ஏழாம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை 16ம் பெனடிக்டை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் லாக்குய்லாவில் நடைபெறவுள்ள ஜி8 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இவர் திருத்தந்தையை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையையும் சந்திப்பார் எனவும் கூறப்படுகின்றது.

ஜப்பானின் சுமார் பன்னிரண்டு கோடியே எழுபது இலட்சம் மக்களில் பத்து இலட்சம் பேர் கத்தோலிக்கர். நவீன ஜப்பானில் தற்போதைய பிரதமர் தவிர இதுவரை இன்னும் இரு கத்தோலிக்கப் பிரதமர்கள் பதவியில் இருந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.