2009-06-26 15:46:17

இலங்கையில் போர் காரணமாக புலம் பெயர்ந்துள்ள இளையோருக்கான உயர்கல்வி


சூன்26,2009. இலங்கையில் போர் காரணமாக புலம் பெயர்ந்துள்ள இளையோருக்கான உயர்கல்விக்கென ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி போன்றவை வழங்கியுள்ள 105 கோடியே 80 இலட்சம் ரூபாயை இலங்கை அரசு செலவழிக்கவிருப்பதாகவும் ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.

வடபகுதியை மீண்டும் கட்டி எழுப்புவதற்குப் பொறுப்பேற்றுள்ள உதுரு வசந்தாய வடக்கு முன்னேற்றத் திட்டம் என்ற அமைப்பு இப்பணியைச் செய்யும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அறிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கென 2 கோடியே 30 இலட்சம் ரூபாயும், அதே பல்கலைகழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர்க்கு விடுதி கட்டுவதற்கு 9 கோடி ரூபாயும், யாழ்ப்பாண உயர் தொழிற்நுட்பக் கல்வி கட்டிடங்களுக்கென சுமார் 60 கோடியே 90 இலட்சம் ரூபாயும், உள்கடட்மைப்புகளுக்கென ஒரு கோடியே 45 இலட்சம் ரூபாயும், வவுனியாவில் கட்டப்பட்டு வரும் புதிய பல்கலைகழகத்திற்கென சுமார் 6 கோடி ரூபாயும் செலவழிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் கட்டப்பட்டு வரும் புதிய பல்கலைகழகம் 2011ம் ஆண்டில் முடிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சகம் கூறியதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.