2009-06-23 15:34:11

வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிக்கு ஹைட்ரோப்புளூரோகார்பன் வாயுக்கள் அச்சுறுத்தல்


சூன்23,2009 பொருட்களை பாதுகாப்பதற்கான குளிர்சாதன பெட்டிகளுக்கென பயன்படுத்தப்படும் ஹைட்ரோப்புளூரோகார்பன் வாயுக்கள் வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்குக் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றன என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியது.

வெப்பநிலை மாற்றத்துக்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் ஓசோன் வாயு மண்டலத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில், ஏர் கண்டிஷன் அமைப்புகள், பிரிட்ஜ் போன்ற குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோப்புளூரோகார்பன் வாயுக்கள் வெளியேற்றம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வாயுக்கள் வெளியேற்றம் கட்டுபடுத்தப்படாவிட்டால், மொத்த வாயுக்கள் வெளியேற்றத்தின் அளவு, 2050ம் ஆண்டில் 9 ஜிகா டன்களாக இருக்கும், இது மொத்த கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் 45 விழுக்காட்டுக்குச் சமமாக இருக்கும் என்றும் அவ்வாய்வு எச்சரித்துள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.