2009-06-23 15:32:22

ஈராக்கின் குண்டு வெடிப்பில் பலியான மற்றும் காயமடைந்தோருடனான கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஒருமைப்பட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் பேராயர் சாக்கோ


சூன்23,2009 ஈராக்கின் டாசாவில் ஷியைய்ட் முஸ்லீம் பிரிவு மசூதிக்கு அருகில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பலியான மற்றும் காயமடைந்தோருடனான கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஒருமைப்பட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் அந்நாட்டு பேராயர் லூயிஸ் சாக்கோ.

கிர்குக் பேராயர் சாக்கோ சலைமையிலான குழு, முஸ்லீம் சமயத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து தங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததோடு அப்பாவி பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் இவ்வன்முறைக்கெதிரான கண்டனத்தையும் வெளியிட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் ஈராக்கிலிருந்து அகற்றப்பட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்று மக்கள் அஞ்சுவதாகவும் பேராயர் சாக்கோ குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை ஷியா மசூதி அருகில் லாரியிலிருந்து வெடித்த குண்டில் 74 பேர் இறந்தனர், ஏறத்தாழ 200 பேர் காயமடைந்தனர் மற்றும் 50க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.