2009-06-23 15:34:29

ஆயுதங்களற்ற படைத் தினத்திற்கு குவாக்கர்ஸ் அழைப்பு


சூன்23,2009 பிரிட்டன் அரசு, ஆயுதப்படை தினம் கடைபிடிப்பதற்குத் தயாரித்து வரும் வேளை, ஆயுதங்களற்ற படைத் தினத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது குவாக்கர்ஸ் என்ற அமைதிக்கான சமய அமைப்பு ஒன்று.

ஒவ்வொரு மனிதனும் மதிப்புமிக்கவன் என்றுரைக்கும் இவ்வமைப்பினர், மோதல்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், போர்களைத் தவிர்க்கவும் இராணுவம் சாராத வழிகளை ஊக்குவிக்கவும் அதற்கு பயிற்சி கொடுக்கவும் முயற்சித்து வருகின்றனர் என்று அவ்வமைப்பின் கேட் பார்ட்டோன் கூறினார்.

சர்வதேச உறவுகளில் ஏற்படும் பதட்டநிலைகளைத் தவிர்ப்பதற்கு ஆயுதங்களை தொடர்ந்து நவீனமயமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் போருக்கு எப்பொழுதும் தயாராக இருக்கப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென்ற அரசின் போக்கிற்கு இவ்வமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் பார்ட்டோன் சுட்டிக்காட்டினார்.

ஜூன்27, வருகிற சனிக்கிழமை, ஆயுதப்படை தினத்தைக் கடைபிடிப்பதற்குத் பிரிட்டன் அரசு தயாரித்து வருகிறது.

பிரிட்டனில் இயங்கும் குவாக் அமைப்பினர், இஸ்ரேல், பாலஸ்தீனிம், புருண்டி, தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அஹிம்சா வழிகளைக் கையாளும் அனைவரோடும் சேர்ந்து வேலை செய்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.