2009-06-22 15:10:42

வரலாற்றில் ஜூன் 23 புனித ஜோசப் கப்பாசோ விழா.


இத்தாலியில் பிறந்த ஜோசப் கப்பாசோ சிறுவனாக இருந்த போதே சிறிய புனிதர் என அழைக்கப்பட்டார். இத்தாலிய குருக்களின் முத்து எனவும் அழைக்கப்படுகிறார். சிலுவையில் இறந்த இயேசு, உங்களை அச்சுறுத்தாத, கைவிடாத நண்பர். எனவே அவரில் நம்பிக்கை வையுங்கள் என்று இவர் சொல்வதுண்டு.

சூன் 23 புனித எதெல்ரெடா விழாவுமாகும். புனித வில்பிரட்டை சந்தித்த பின்னர் துறவியாக வேண்டுமென்ற ஆவல் இவருக்கு வந்தது. கணவரின் ஒப்புதலுடன் மணவாழ்வைத் துறந்தார். ஒரு கன்னியர் இல்லத்தையும் ஆரம்பித்து எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்நதவர் புனித எதெல்ரெடா.

1868 – கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் தட்டச்சு இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக ஆஷ்விஷ் வதைப்போர் முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.

1980 - இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார்.

1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்

1991 - மோல்டோவா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

போலந்து, நிக்கராகுவா, உகாண்டா ஆகிய நாடுகளில் தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.