2009-06-20 14:59:22

சான் ஜொவான்னி ரொத்தோந்தோவிற்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை


சூன்20,2009. மேலும், இத்தாலியில் புனித பாத்ரே பியோ திருத்தலம் அமைந்துள்ள San Giovanni Rotondo விற்கு இஞ்ஞாயிறன்று திரு்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை.

ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் திருத்தந்தை, முதலில் புனித பாத்ரே பியோ பியத்ரெல்சினாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருவருளின் மாதா திருத்தலம் சென்று அப்புனிதரின் கல்லறை முன்பாகச் செபிப்பார்.

பின்னர் புனித பாத்ரே பியோ பியத்ரெல்சினா ஆலயத்தின் முன்பாக அமைந்திருக்கின்ற வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி நண்பகல் மூவேளை செப உரையும் ஆற்றுவார். மாலையில் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளையும் மருத்துவர் மற்றும் நிர்வாகக் குழுவையும் சந்திப்பார். இந்த மருத்துவமனையானது 1956ம் ஆண்டு பாத்ரே பியோவால் ஆரம்பிக்கப்பட்டது.

பாத்ரே பியோ பியத்ரெல்சினா ஆலயத்தில் குருக்கள், இருபால் துறவியர் மற்றும் இளையோரைச் சந்தித்த பின்னர் வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 








All the contents on this site are copyrighted ©.