2009-06-19 16:36:46

குடியேற்றதாரர் பற்றிய சட்டத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருமாறு ஒபாமாவுக்கு சிகாகோ கர்தினால் வலியுறுத்தல்


சூன்19,2009. இந்த ஆண்டு முடிவதற்குள் குடியேற்றதாரர் பற்றிய சட்டத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமாவையும் காங்கிரஸ் அவையினரையும் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் சார்பாக இவ்வேண்டுகோளை முன்வைப்பதாக இவ்வியாழனன்று கூறிய அவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியேற்றதாரர் பற்றிய சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என்று பல ஆண்டுகளாக உணரப்பட்டு வருவதால் இதனை தாமதப்படுத்தாமல் உடனடியாகச் செயல்படுத்துமாறு கேட்டுள்ளார்.

டெக்ஸசில் நடைபெற்ற ஆயர்களின் கூட்டத்தின் இறுதியில் இவ்வாறு அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்த கர்தினால், சட்டத்திற்குப் புறம்பே யாரும் நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ முடியாது என்றும் கூறினார்.

அதேசமயம் நாட்டில் அனைத்து நீதியான சட்டங்களும் மதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் சிகாகோ கர்தினால் ஜார்ஜ் கேட்டுக்கொண்டார்.

 








All the contents on this site are copyrighted ©.