2009-06-18 15:30:12

வரலாற்றில் ஜூன் 19 புனித ரோமுவால்ட்


புனித ரோமுவால்ட், இத்தாலியின் ரவென்னாவில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். ஒருமுறை இவரது தந்தை சொத்து தகராறு காரணமாக உறவினர் ஒருவரை இவரது கண்முன்னே கொன்று போட்டார். இதற்குப் பரிகாரம் தேடி ஆசீர்வாதப்பர் சபை மடம் ஒன்றில் தஞ்சம் அடைந்து கடும் தவம் செய்தவர். இந்நாளில் புனித ஜூலியானா பல்கனேரியின் விழாவும் சிறப்பிக்கப்படுகின்றது. இவர் பெண்களுக்கென மரியின் ஊழியர் சபையை நிறுவியவர்.

1862 அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பகுதிகளில் அடிமைத்தனம் சட்டத்தினின்று அகற்றப்பட்டது.

1945 மியான்மார் ஜனநாயக அரசியல்வாதி ஆங் சான் சு கி பிறந்தார்.

1961 குவைத் பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்தது







All the contents on this site are copyrighted ©.