2009-06-18 16:09:02

பின்லாந்தில் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டினர் ஒருவர் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்


சூன்18,2009. பின்லாந்து தலத்திருச்சபை 500 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது மண்ணின் மைந்தரை ஆயராகப் பெற்றுள்ளது.

தெஹோனியன் துறவு சபையைச் சேர்ந்த பேருட்திரு தீமு சிப்போ ஹெல்சின்கியின் ஆயராகத் திருத்தந்தை 16ம் பெனடிக்டால் இப்புதனன்று நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டைச் சேர்ந்த ஆயர் ஒருவரை அத்தலத்திருச்சபை பெற்றுள்ளது.

பின்லாந்து நாட்டில் ஹெல்சின்கி நகர் அமைக்கப்படாத அக்காலக்கட்டத்தில் 1510ம் ஆண்டு முதல் 1522ம் ஆண்டு வரை துர்க்கு ஆயராகப் பணியாற்றினார் ஆயர் ஆர்விட் குர்கி. அதற்குப் பின்னர் வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களே அங்கு பணியாற்றியிருக்கின்றனர். மொழி உட்பட பல பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

லூத்தரன் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட பின்லாந்தில் குடியேற்றதாரர்களால் 1970களில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. தற்சமயம் அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரம் ஆகும்.










All the contents on this site are copyrighted ©.