2009-06-17 16:01:54

ஆயுதம் தாங்கிய மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நூறு கோடி சிறாருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு யூனிசெப் அழைப்பு


சூன்17,2009. ஆயுதம் தாங்கிய மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நூறு கோடி சிறாருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பு அழைப்புவிடுத்தது.

இச்சிறாரில் ஏறத்தாழ முப்பது கோடிப் பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனக்கூறும் யூனிசெப் நிறுவனம், ஆயுதம் தாங்கிய மோதல்களில், சிறாரின் வாழ்வதற்கான உரிமை, குடும்பத்தோடு இருப்பதற்கான உரிமை, கல்வி மற்றும் நலவாழ்வுக்கான உரிமை, மனிதாபிமான உதவிகள் பெறுவதற்கான உரிமை எனச் சிறாரின் உரிமைகள் மீறப்படுகின்றன என்று அறிவித்தது.

யூனிசெப் நிறுவனமும், சிறாரும் ஆயுதம் தாங்கிய மோதல்களும் பற்றிய ஐ.நா.பொதுச் செயலரின் அலுவலகமும் இணைந்து, போர்களினால் சிறாருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பத்து ஆண்டுகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள 236 பக்க அறிக்கையில் இவ்வாறு கூறபட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.