2009-06-16 15:22:32

பெரு திருநற்கருணை நாடாக அமைய கர்தினால் வலியுறுத்தல்


சூன் 16,2009 பெரு அரசுக்கும் அந்நாட்டின் அமேசான் வாழ் பூர்வீகக் குடிமக்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவரும் வேளை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் திருநற்கருணையின் மீது பக்தி கொண்ட நாடாக அதனை மாற்ற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் பெரு கர்தினால் ஹூவான் லூயிஸ் சிப்ரியானி.

ஒவ்வொரு குடிமகனும் அமைதியையும் மகிழ்வையும் விதைப்பவர்களாகச் செயல்பட்டு நாட்டை கட்டி எழுப்புவதில் உதவ வேண்டும் என்ற கர்தினால், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான உள்மனப் போராட்டத்திலிருந்தே மகிழ்வு, அமைதி, நீதி, ஐக்கியம், பாசம் போன்றவையும் வன்முறை பொய், வெறுப்பு, உரிமை மீறல்கள் போன்றவையும் பிறக்கின்றன என்றார்.

பெரு நாட்டில் பூர்வீகக் குடிமக்களின் நிலங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் பறிக்கப்படுவதால் இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் கர்தினால் சிப்ரியானி.

 








All the contents on this site are copyrighted ©.