2009-06-16 15:20:44

கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் மால்கம் ரஞ்தித்


சூன்16,2009. இலங்கைத் தலைநகர் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக பேராயர் ஆல்பர்ட் மால்கம் ரஞ்தித்தை இன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தற்போதைய கொழும்பு பேராயர் ஆஸ்வால்டு தாமஸ் கோல்மான் கோமிஸின் பணி ஒய்வை திருச்சபை சட்டம் 401, எண் 1 ன்படி ஏற்ற திருத்தந்தை கொழும்புவின் புதிய பேராயராக, பேராயர் மால்கம் ரஞ்தித்தை நியமித்துள்ளார்.

இலங்கையின் போல்கஹவேலாவில் 1947ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்த பேராயர் மால்கம் ரஞ்தித், 1975ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். உரோம் விவிலிய நிறுவனத்தில் பயின்ற இவர், கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் பின்னர் 1995ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இரத்னபுரா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணிசெய்தார்.

பின்னர் 2001ம் ஆண்டில் திருப்பீட விசுவாசபரப்புப் பேராயத்தின் செயலராக நியமிக்கப்பட்ட இவர், 2004ம் ஆண்டில் இந்தோனேசியா மற்றும் கிழக்கு தைமூரின் திருப்பீட தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 2005ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி திருப்பீட திருவழிபாடு மற்றும் திருவருட்சாதன பேராயத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.

இச்செவ்வாயன்று கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார் பேராயர் மால்கம் ரஞ்தித்.








All the contents on this site are copyrighted ©.