2009-06-15 15:09:47

குருக்கள் ஆண்டு தொடங்குவதிலிருந்து குருக்களின் புனிதத்துவத்துடன்கூடிய புதுப்பித்தல் திருச்சபைக்குள் இடம்பெறும், திருப்பீடப் பேச்சாளர்


சூன்15,2009 வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் திருஇதயத் திருவிழாவிலிருந்து குருக்களின் புனிதத்துவத்துடன்கூடிய புதுப்பித்தல் திருச்சபைக்குள் இடம்பெறும் என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை குரு பெதரிக்கோ லொம்பார்தி.

சர்வதேச குருக்கள் ஆண்டு வருகிற வெள்ளியன்று தொடங்குவது பற்றி இவ்வாறு கூறிய குரு லொம்பார்தி, குருக்களுக்கு அதிக முன்மாதிரிகையான குரு ஜான்மரி வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் நாளில் இவ்வாண்டு தொடங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

குருக்களின் செபவாழ்வின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ள வார்த்தைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மனிதக் கவலைகளாலும் நடவடிக்கைகளாலும் ஒருவர் மேற்கொள்ளப்படும் போது செபத்திற்கு ஒரு மேலோட்டமான முக்கியத்துவம் கொடுப்பதில் இருக்கும் ஆபத்தை ஏற்கனவே திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

குருக்களின் புனிதத்துவத்தும் என்பது அது அவர்களைச் சார்ந்துள்ள கடமையெனினும் அது விசுவாசிகள் சமூகத்தோடு தொடர்புடையது மற்றும் ஒருசில தவறான குருக்களின் செயல்பாடுகளினால் திருச்சபையின் நம்பகத்தன்மையே சந்தேகிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார் இயேசுசபை குரு பெதரிக்கோ லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.