2009-06-15 15:08:21

குடியேற்றதாரர் பற்றிய பெண் துறவியரின் கருத்தரங்கிற்குத் திருத்தந்தை வாழ்த்து


சூன்15,2009 இலாப நோக்குடன் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுத்த மனிதர்களை வேறு இடங்களுக்குக் கடத்திச் செல்வது குறித்து விவாதிக்கும் பெண் துறவியரின் மூன்று நாள் கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரில் இடம் பெறும் பெண் துறவிகளின் உலகக் கருத்தரங்கிற்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயால் அனுப்பப்பட்ட செய்தி மனிதவாழ்வு குறித்த மதிப்பீடுகளையும் மனித உரிமைகளையும் காக்க இக்கருத்தரங்கின்வழி புதிய பலம் கிட்டும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையையும் வெளியிடுகிறது.

யுஐஎஸ்ஜி என்ற பெண்துறவுசபைகள் அதிபர்களின் சர்வதேச அமைப்பு, ஐஒஎம் என்ற குடியேற்றத்திற்கான சர்வதேச மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கு ஏழைநாடுகளின் மக்கள் பொருளாதார காரணங்களுக்காக நாடுவிட்டு நாடு குடிபெயர சட்டவிரோதக் குழுக்களால் உதவப்படுவது குறித்து விவாதிக்கிறது.

ஏழ்மையின் காரணமாக மனித மாண்பு இழக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ள இக்காலக்கட்டத்தில் பிறரன்பைக் குறித்த கண்ணோட்டம் பிறக்க வேண்டும் எனவும் இம்மூன்று நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.