2009-06-13 15:09:53

குழந்தைத் தொழில் முறையை நிறுத்துவதற்கு அதிக அளவில் சமுதாய ஈடுபாடு அவசியம், இந்திய திருச்சபை


சூன்13,2009 இந்தியாவில் குழந்தைத் தொழில் முறையை நிறுத்துவதற்கு அதிக அளவில் சமுதாய ஈடுபாடு அவசியம் என்று திருச்சபை மற்றும் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கூறினர்.

நேற்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு கூறிய அவர்கள், குழந்தைத் தொழில் முறையை ஒழிப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைத் தொழில் முறையை ஒழிப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் தனிப்பட்ட ஆள் மற்றும் தனிப்பட்ட குடும்பத்தின் முயற்சியின்றி இதனை ஒழிக்க முடியாது என்று இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையச் செயலர் அருட்திரு ஜோஸ் வட்டக்குழி கூறினார்.

உலகில் 16 கோடியே 50 இலட்சம் குழந்தைத் தொழிலாளர் உள்ளனர், இவர்களில் பெரும்பகுதி இந்தியாவில் இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சில தன்னார்வக் குழுக்களின் கணிப்புப்படி தற்சமயம் இந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர் இருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.