2009-06-12 14:24:36

கிரேட்டாவில் அக்டோபர் 7 முதல் 14 வரை எல்லாக் கிறிஸ்தவ மரபுகளைச் சேர்ந்த 120 இறையியல் வல்லுநர்கள் கூட்டம்


சூன்12, 2009. எல்லாக் கிறிஸ்தவ மரபுகளைச் சேர்ந்த 120 இறையியல் வல்லுநர்கள் கிரேக்கத்திலுள்ள கிரேட்டாவில் வருகிற அக்டோபர் 7 முதல் 14 வரை கூட்டம் நடத்தவுள்ளனர்.

உலகில் திருச்சபைகள் தங்கள் மறைப்பணியை நோக்கும் விதம் மற்றும் இறையியல், கிறிஸ்தவ ஒன்றிப்பு, ஒழுக்கநெறி சார்ந்த கேள்விகள் ஆகியவைகளில் அவை தீர்மானம் எடுக்கும் விதம் ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் ஒரு மைல்கல்லாக மாறும் என்று இதனை நடத்தும் உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் விசுவாசம் மற்றும் ஒழுங்கு அவை இயக்குனர் ஜான் ஜிபவுட் கூறினார்.

உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமானது 110க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 349 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பாகும். இதில் 56 கோடிக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.