2009-06-12 14:22:32

உலகளாவிய நன்னெறி விதிமுறைகளுக்கு அடிப்படையாக இயற்கைச் சட்டத்தின் உண்மையான விழுமியங்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும், சர்வதேச இறையியல் குழு


சூன்12, 2009. உலகளாவிய நன்னெறி விதிமுறைகளுக்கு அடிப்படையாக இயற்கைச் சட்டத்தின் உண்மையான விழுமியங்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் என்று சர்வதேச இறையியல் குழு வெளியிட்ட புதிய ஏடு கூறுகிறது.

உலகளாவிய நன்னெறி விதிமுறைகளுக்கான தேடல்-இயற்கைச் சட்டம் பற்றிய புதிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் இத்தாலியத்திலும் ப்ரெஞ்சிலும் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய ஏடு, உலகளாவிய நன்னெறி விதிமுறைகளின் மதிப்பீடுகள் வலியுறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் பொருந்துகின்ற நன்னெறி விதிமுறைகள் பற்றி பொது மக்கள் கொண்டுள்ள உறுதியற்ற கருத்துக்கள், இன்னும் அவற்றை அரசுகள் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவ்வேடு கூறுகிறது.

இம்மதிப்பீடுகள் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் நலிந்துள்ள நீதித்துறை அமைப்பு உறுதிப்பட உதவும் என்றும் அந்த சர்வதேச இறையியல் குழுவின் அருட்தந்தை தாமஸ் பொனினொ கூறினார்.

இயற்கைச் சட்டம் இரத்து செய்யப்படவில்லை, மாறாக இது அன்பின் புதிய சட்டத்தால் முழுமை அடைகின்றது என்றும் குரு பொனினொ கூறினார்








All the contents on this site are copyrighted ©.