2009-06-11 14:50:38

குருக்கள் ஆண்டை அறிவித்திருப்பது, திருச்சபை குருத்துவத்தின் விழுமியங்களை மீண்டும் கண்டுணர வாய்ப்பாக இருக்கின்றது, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்


சூன்11,2009. குருத்துவம் அண்மையில் ஒரு சீர்திருத்தத்தை எதிர் கொண்டாலும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் குருக்கள் ஆண்டை அறிவித்திருப்பது, திருச்சபை குருத்துவத்தின் விழுமியங்களை மீண்டும் கண்டுணர வாய்ப்பாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

இம்மாதம் 19ம் தேதியிலிருந்து 2010ம் ஆண்டு சூன் 19 வரை அறிவிக்கப்பட்டிருக்கும் சர்வதேச குருக்கள் ஆண்டு பற்றிக் கருத்து தெரிவித்த சிகாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் இவ்வாறு கூறினார்.

அணுஆயுதக்களைவு, குடும்ப வன்முறை போன்ற இன்றைய உலகம் எதிர் கொள்ளும் சில பிரச்சனைகள் பற்றிச் சுட்டிக்காட்டிய கர்தினால், திருச்சபையிலுள்ள அனைத்து விவகாரங்கள் போலவே இந்த விவகாரங்களும் நமது குருக்கள் மீது கவனம் செலுத்தப்படாமல் தீர்க்கப்பட முடியாது என்று குறிப்பிட்டார்.

திருநிலைபடுத்தப்பட்ட ஒரு குரு தனது வாழ்விலும் பணியிலும் எப்படி இருக்கிறார், அவற்றில் அவர் எவ்வாறு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி சர்வதேச குருக்கள் ஆண்டு சிந்திக்க அழைப்புவிடுக்கிறது என்றும் சிகாகோ பேராயர் கூறினார்.

கியூப ஆயர் ஒருவருடன் தான் கலந்துரையாடியது பற்றியும் பகிர்ந்து கொண்ட கர்தினால் ஜார்ஜ், ஆலயங்கள் பற்றாக்குறை மற்றும் நாத்தீக கொள்கை பரப்பப்படுதலால் இரண்டு விழுக்காட்டுக்குக் குறைவாகவே கியூபாவில் மக்கள் தங்கள் மதத்தைக் கடைபிடிக்கின்றனர் என்றார்.








All the contents on this site are copyrighted ©.