2009-06-10 15:40:03

உலகில் கடந்த ஆண்டில் இராணுவத்திற்கென 1,46,400 கோடி டாலர் செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு


ஜூன்10,2009. உலகில் கடந்த ஆண்டில் இராணுவத்திற்கென 1,46, 400 கோடி டாலர் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் அமெரிக்க ஐக்கிய நாடு முன்னிலை வகிப்பதாகவும் சிப்ரி என்ற ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றுமதியானது 2007ம் ஆண்டைவிட 4 விழுக்காடும் 1999ம் ஆண்டிலிருந்து 45 விழுக்காடும் அதிகம் என்று அந்நிறுவனத்தின் உலக ஆயுத வியாபாரம் குறித்த ஆண்டறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற எண்ணத்தில் பல நாடுகள் இராணுவத்திற்கான செலவை அதிகரித்துள்ளன என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் சண்டைகளுக்கென அமெரிக்க ஐக்கிய நாடு மட்டும் 90,300 கோடி டாலரை செலவழித்துள்ளது என்றும் சிப்ரி கூறியது.

1999க்கும் 2008க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அதிகரித்துள்ளதில் 58 விழுக்காட்டிற்கு அமெரிக்க ஐக்கிய நாடு பொறுப்பு என்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் இந்தியா பாகிஸ்தான் இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளில் 23,300 அணுஆயுதங்கள் உள்ளன என்றும் சிப்ரி தெரிவித்தது

 








All the contents on this site are copyrighted ©.