2009-06-09 14:07:37

இஸ்ரேல் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கான நிதிகளை முடக்காது, இஸ்ராயேல் தூதரகம் அறிவிப்பு


ஜூன்09,2009. கத்தோலிக்கப் பள்ளிகளுக்கான நிதிகள் முடக்கப்படும் என இஸ்ரேல் அரசு ஏற்கனவே விடுத்துள்ள அரசாணை நீக்கப்பட்டு நிதிகள் பெறுவதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதரகம் அறிவித்தது.

பள்ளிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் குறித்த முழுவிவரங்களை ஒவ்வொரு கத்தோலிக்கப் பள்ளியும் அரசுக்கு சமர்ப்பிக்கும் வரை கல்வி அமைச்சகத்தின் நிதிகள் முடக்கப்படும் என இஸ்ராயேல் நிதி அமைச்சர் எசேக்கேல் ஆபிரகாம்ஆப் அண்மையில் அறிவித்திருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளதாக திருப்பீடத்திற்கான இஸ்ரேல் தூதரகம் தெரிவிக்கிறது.

1994ம் வருடம் திருப்பீடத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலில் திருச்சபையின் இடம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.