2009-06-06 15:27:35

வடபகுதி தமிழர்களின் தேவைகள் மறக்கப்படக்கூடும், யாழ்ப்பாண ஆயர் கவலை


ஜூன்06,2009. இலங்கையில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இடம் பெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் நிகழ்வுகளுக்கு மத்தியில் வடபகுதியில் தமிழர்களின் தேவைகள் மறக்கப்படக்கூடும் என்ற கவலையைத் தெரிவித்தார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

போரில் அரசு வெற்றி பெற்றாலும் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்குச் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்படுவதற்கான தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்துமாறு ஆயர் கேட்டுக் கொண்டார்.

தலைமை நீதிபதி சரத் என். சில்வா நிருபர்களுக்கு அளித்த பேட்டியையொட்டி யூக்கா செய்தி நிறுவனத்திடம் பேசிய யாழ்ப்பாண ஆயர் தாமஸ், வடக்கிலும் கிழக்கிலும் புலம் பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் மக்கள் தரமற்ற உணவு, நோய், மற்றும் நலவாழ்வு பிரச்சனைகளை எதிர்நோக்குவதால் அவர்களின் நிலைமை மேலும் மோசமடைந்து வருகின்றுது என்றார்.

இச்சனிக்கிழமை ஓய்வுபெற்ற இலங்கைத் தலைமை நீதிபதி சரத் என். சில்வா, தான் பார்வையிட்ட புலம் பெயர்ந்த மக்கள் குடியிருக்கும் நிவாரண கிராமங்கள் பற்றி நிருபர்களுக்கு விவரித்த போது, தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்கு பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.