2009-06-06 15:25:53

குருக்கள் ஆண்டு கொண்டாட்டங்களில் குருக்கள் திறந்த மனத்துடன் பங்கு கொள்ள திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் அழைப்பு


ஜூன்06,2009 சர்வதேச குருக்கள் ஆண்டு இம்மாதத்தில் தொடங்கவுள்ள வேளை, குருக்கள் இவ்வாண்டுக் கொண்டாட்டங்களில் திறந்த மனத்துடன் பங்கு கொள்ளுமாறு திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் பேராயர் மவ்ரோ பியாசென்சா ஊக்கப்படுத்தினார்.

“கிறிஸ்துவின் பிரமாணிக்கம், குருக்களின் பிரமாணிக்கம்” என்ற தலைப்பில் இம்மாதம் 19ம் தேதி தொடங்கும் இவ்வாண்டை முன்னிட்டு உலகெங்குமுள்ள குருக்களுக்கெனக் கடிதம் எழுதியுள்ள பேராயர் பியாசென்சா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த சர்வதேச ஆண்டு இறைமகனாம் கிறிஸ்துவின் தனித்துவம், தந்தையால் வெளிப்படுத்தப்பட்ட அவரின் திருப்பணி மற்றும் மீட்பின் வியத்தகு திட்டத்தை மையம் கொண்டதாய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

இச்சர்வதேச குருக்கள் ஆண்டு தொடங்கும் நாளில் மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னியின் திருப்பண்டங்கள் கூரேதாசிலிருந்து வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவுக்குக் கொண்டுவரப்படும் என்றார் பேராயர்.

இவ்வாண்டின் நிறைவாக 2010ம் ஆண்டு ஜூன் 9 முதல் 11 வரை உரோமையில் சர்வதேச மாநாடு ஒன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.