2009-06-06 15:28:53

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 10 இலட்சத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது


ஜூன்06,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 10 இலட்சத்துக்கு அதிகமாகியுள்ளது என்று அந்நாட்டு அதிகாரப்பூர்வ 2009ம் ஆண்டு கத்தோலிக்கக் குறிப்பேடு கூறுகிறது.

இவ்வாரத்தில் இதனை நிருபர் கூட்டத்தில் வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, அந்நாட்டில் மொத்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை 6 கோடியே 81 இலட்சத்து 15 ஆயிரத்து ஒன்று அதாவது மொத்த மக்கள் தொகையில் 22 விழுக்காடு என்று உறுதி செய்துள்ளது.

அந்நாட்டில் 41,489 மறைமாவட்ட மற்றும் துறவற குருக்கள் உள்ளனர். 189 குருத்துவ கல்லூரிகளில் 4,973 குருத்துவ மாணவர்கள் பயிலுகின்றனர், 60,715 அருட்சகோதரிகளும் 4,905 அருட்சகோதரர்களும் உள்ளனர். 562 கத்தோலிக்க மருத்துவமனைகள் உள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள கத்தோலிக்க நிறுவனங்கள் பிறரன்புப் பணிகளுக்கென 2,820 கோடி டாலர் வழங்கியுள்ளன என்றும் அக்குறிப்பேடு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.