2009-06-03 13:16:40

புதன் பொது மறைபோதகம் – துறவி ரபானுஸ் மவ்ருஸ்


ஜூன்03,2009. இன்றைய நம் மறைபோதகத்தில் மத்திய காலத்தில் வாழ்ந்த மேலும் ஓர் உன்னத துறவியான ரபானுஸ் மவ்ருஸ் குறித்து நோக்குவோம் என தனது இன்றைய புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்த RealAudioMP3 ை 16ம் பெனடிக்ட்.

தனது இளம் வயதிலேயே தன்னை துறவு வாழ்க்கைக்கு அர்ப்பணித்து தியானயோக துறவுமடத்தில் சேர்ந்த இரபானுஸ், முற்போக்குக் கலைகளிலும் கிறிஸ்தவ மரபுகளிலும் நன்கு பயிற்சி பெற்றார். புல்டா துறவுமட அதிபராகவும் பின்னர் மயின்ஸ் பேராயராகவும் பணியாற்றிய இவர், தமது ஆழமான கல்வி மற்றும் மேய்ப்புப்பணி ஆர்வத்தின் மூலமாகப் பேரரசின் ஐக்கியத்திற்காக நற்பணியாற்றியுள்ளார். திருமறைநூல்கள் மற்றும் திருச்சபைத் தந்தையர்களால் ஊட்டப்பட்ட ஆழமான கிறிஸ்தவ கலாச்சாரம் பரவவும் உதவியுள்ளார். இளமையிலேயே கவிதைகள் எழுதியுள்ளார். Veni Creator Spiritus என்ற புகழ் பெற்ற தூய ஆவியின் வருகைக்காக இறைஞ்சும் பாடலின் ஆசிரியராகவும் இவர் இருக்கலாம். உண்மையில் இவரது முதல் இறையியல் பணியானது, திருச்சிலுவை பற்றிய கவிதையாக இருந்தது. இக்கவிதையானது, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை குறித்து நிற்கின்றது. கவிதையை, படக்கலையோடு இணைக்கும் மத்தியகால முறையானது, மனது, இதயம், உணர்வுகள் என முழுமனிதனையும் இறைவனின் வார்த்தையில் அடங்கியுள்ள உண்மையைத் தியானிப்பதற்கு இட்டுச் செல்கின்றது. இதே உணர்வில் இரபானுஸ், கிறிஸ்தவ கலாச்சார மரபுகளின் வளமையை, திருமறைநூல்கள் பற்றிய சிறப்பான விளக்கம், திருவழிபாடு மற்றும் மேய்ப்புப்பணி மடல்களின் அவரது விளக்கம் மூலமாக எடுத்துச் சொன்னார். படிப்பு, ஆழ்ந்த தியானம், இடைவிடா செபம் ஆகியவற்றால் பேணப்பட்ட உயிரூட்டமான அவரின் எடுத்துக்காட்டான திருப்பணியின் மூலம் திருச்சபையின் இம்மாபெரும் மனிதர் தொடர்ந்து நம்மைக் RealAudioMP3 கவர்ந்து வருகிறார்.

இவ்வாறு புதன் மறைபோதகத்தை நிறைவு செய்து அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.