2009-06-03 13:11:31

தியானமென் வளாகத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த புலன்விசாரணைகள் இடம்பெறுமாறு ஹாங்காங் திருச்சபை அழைப்பு


ஜூன்03,2009. சீனாவில் ஜனநாயகத்தை ஆதரித்து தியானமென் வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த புலன்விசாரணைகள் இடம்பெறுமாறு ஹாங்காங் கத்தோலிக்கத் திருச்சபை கேட்டுள்ளது.

தியானமென் வளாகத்தில் படுகொலைகள் இடம்பெற்ற நினைவுத் திருப்பலியை நிகழ்த்திய கர்தினால் சென், இப்புலன்விசாரணைகள் பழிவாங்கும் நோக்கத்திற்காக அல்ல, மாறாக உண்மையை அறிவதற்காக இடம்பெற வேண்டும் என்றார்.

இச்சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, தற்போதைய இளைய தலைமுறை அந்த பெரிய வரலாற்று நிகழ்வில் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் இழக்கக்கூடும் என்றும் கர்தினால் சென் கூறினார்.

ஜனநாயக அமைப்பு, ஊழலற்ற அரசு ஆகியவற்றுக்கு அழைப்புவிடுத்து 1989ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி சீனத்தலைநகரிலுள்ள தியானமென் வளாகத்தில் போராட்டம் மேற்கொண்ட மாணவர்களைக் கலைப்பதற்காகப் படைவீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.