2009-06-03 13:14:23

உலகிலே மிகவும் அமைதியான நாடு நியுசிலாந்து


ஜூன்03,2009. உலகிலே மிகவும் அமைதியான நாடு நியுசிலாந்து என்று புதிதாக வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வு கூறுகிறது.

அரசியல் ரீதியாக நிலையான தன்மை, பயங்கரவாத அச்சுறுத்தல், வன்முறைப் போராட்டங்களுக்கான கூறுகள், மனித உரிமைகள் மதிக்கப்படுதல், உள்நாட்டுக் குழப்பங்கள், ஆயுத இறக்குமதி, வெளிநாட்டுச் சண்டைகளில் ஈடுபாடு என 23 தலைப்புகளின் அடிப்படையில் த குளோபல் பீஸ் இன்டெக்ஸ் என்ற அமைப்பு எடுத்த ஆய்வு இவ்வாறு கணித்துள்ளது.

உலகில் மிகவும் அமைதியான 10 நாடுகள் என்ற வரிசையில் முதலில் நியுசிலாந்து, பின்னர் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்ட்டரியா, சுவீடன், ஜப்பான், கானடா, பின்லாந்து, ஸ்லோவேனியா என அந்த ஆய்வு பட்டியலிட்டுள்ளது.

மிகக்குறைவான அமைதி கொண்ட 10 நாடுகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், சொமாலியா, இஸ்ரேல், சூடான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், பாகிஸ்தான், ரஷ்யா ஜிம்பாபுவே என அவ்வாய்வு தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.