2009-06-01 14:23:48

வரலாற்றில் ஜூன்02


1896 – குலியெல்மோ மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1946 – இத்தாலிய குடியாட்சி பிறந்தது. இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னர் இரண்டாம் உம்பெர்த்தோ நாட்டை விட்டு வெளியேறினார்.

1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டப்பட்ட விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

1979 – திருத்தந்தை 2ம் ஜான் பவுல் தனது தாயகமான போலந்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் ஒரு கம்யூனிச நாட்டிற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயரை ஏற்றார்.

1535ல் திருத்தந்தை பதினோராம் சிங்கராயரும், 1835 ல் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரும் பிறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.