2009-06-01 14:20:30

ஜூன்02 நற்செய்தி மாற் 12, 13-17


அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, ' போதகரே, சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, 'ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்' என்றார். ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம். அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'சீசருடையவை' என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்றார்.








All the contents on this site are copyrighted ©.