திருத்தந்தையாவேன் என்று ஒருபொழுதும் நினைத்ததேயில்லை, திருத்தந்தை.16ம் பெனடிக்ட்
மே30,2009. மேலும், இச்சந்திப்பிற்குப் பின்னர் பாலர் சபையின் ஏறத்தாழ ஏழாயிரம் சிறாரைச்
சந்தித்து அவர்களின் கேல்விகளுக்குப் பதில் அளித்த திருத்தந்தை, உண்மையைச் சொல்ல வேண்டுமெனில்
திருத்தந்தையாவேன் என்று ஒருபொழுதும் நினைத்ததேயில்லை என்று கூறினார்.
மறக்கப்படட்
ஓர் ஊரிலிருந்து சிறுவனாக வளர்ந்தேன், அக்காலத்தில் திருத்தந்தையாக இருந்த பாப்பிறை 11ம்
பத்திநாதரை எங்கள் தந்தையாகத் தெரிந்துள்ளோம், பார்த்துள்ளோம், ஆனால் இந்தப் பாப்பிறைத்
திருப்பணிக்கு எப்படி என்னை நம் ஆண்டவர் தேர்ந்தெடுத்தார் என்பதை இன்னும் என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை, இது எனது சக்திக்கு மிக அதிகமானது, எனினும் அதனை ஏற்றுள்ளேன்
என்றார்.