2009-05-30 15:22:11

இவ்வாண்டில் 23 கோடியே 90 இலட்சம் பேர் வேலையின்றி இருக்கக்கூடும்


மே30,2009. உலக அளவில் தொழிற் சந்தை நலிந்து வரும் வேளை, இவ்வாண்டில் 23 கோடியே 90 இலட்சம் பேர் வேலையின்றி இருக்கக்கூடும் என்று உலக தொழில் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் கணித்ததைவிட தற்சமயம் அதிகமாக இருக்கும் என்று தெரிவதாக அந்நிறுவன இயக்குனர் ஹூவான் சோமாவியா, ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறினார்.

தற்போதைய இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்நிலை இன்னும் ஆறு முதல் எட்டு வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் சோமாவியா எச்சரித்தார்.

உலகளாவிய வேலை ஒப்பந்தத்தில் நாடுகள் கையெழுத்திடுமாறும் அவர் அழைப்புவிடுத்தார். இவ்வொப்பந்தமானது, வருகிற ஜூன் 3 முதல் 19 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலக தொழில் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் சோமாவியா.








All the contents on this site are copyrighted ©.